செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி கச்சதீவை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தம். அப்ப யார் முதலமைச்சர் ? திரு.கருணாநிதி அன்றைக்கு  முதலமைச்சராக இருந்தார். அன்றைக்கு கச்சதீவை தராவார்த்துக் கொடுக்கும் போது வாயை மூடிக் கொண்டே இருந்தார். ஏனென்றால் ?  சர்க்காரியா கமிஷன். வாயை திறந்தார் என்றால் தூக்கி உள்ள போட்டு விடுவார்கள். அதனால் கச்சத்தீவை எடுத்துக்கொள் என்று சொல்லி, கொடுத்துட்டாரு.

இப்ப வாய் திறந்து பேசுகிறார் யாரு ? திரு. மு.க ஸ்டாலின். திரு.கருணாநிதி  அவருடைய அருமை மைந்தன் முதலமைச்சராக இருக்கின்ற ஸ்டாலின் இன்றைக்கு  கச்ச தீவை  மீட்பேன் என்று பேசுவதற்கு என்ன தார்மீக உரிமை,  திமுகவுக்கு இருக்கிறது ? பேசுவதற்கு என்ன முகாந்திரம் திரு. மு க ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது ?

1974_இல் தாரைவார்த்துக் கொடுத்தது உங்க அப்பா தான். இத நாங்க சொல்லல… அன்னைக்கு பாராளுமன்றத்தில் நாடாளுமன்ற மேலவை…  அதாவது ராஜசபாவில் இந்த பிரச்சனை வரும்போது,  சுரண்சிங்  சொல்றாரு…. கச்சத்தீவை மத்திய அரசு கொடுக்கும்போது அன்றைக்கு முதலமைச்சர் ஆக இருந்த திரு.கருணாநிதியை  இரண்டுமுறை கலந்து ஆலோசித்து இருந்திருக்கிறார். இரண்டு முறை கலந்து ஆலோசிக்கப்பட்டது என்றால் ?   இவருடைய இசைவு இல்லாம ஒப்பந்தம் போட முடியுமா ? அந்த உண்மையை சுரண்சிங் ராஜசபாவில் சொல்லி இருக்கிறார் என தெரிவித்தார்.