நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதி காவல் நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்துவதாக தகவல் கிடைத்தது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தோப்பு துறை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரின் டிக்கியில் 105 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது போதைப் பொருள்களை ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

மேலும்  போதைப் பொருட்களை கடத்தி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை பொருளை கடத்தி வருவதற்கு உபயோகித்த சொகுசு கார் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கஞ்சாவின் மொத்த மதிப்பு 21 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.