தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.  அதன்படி காவலர் நல வாரியத்தின் டிஜிபியாக கருணாசாகர் நியமனம் செய்யப்பட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனராக சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டார். மாநில குற்றப்பதிவுப் பணியக SPஆக ஸ்ரேயா குப்தா, அமலாக்கத்துறை SPஆக செந்தில்குமார், காவலர் நலன் DGP ஆக கருணாசாகர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.