2040ம் ஆண்டிற்குள் உலகளவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் மார்பக புற்றுநோயால் இறப்பார்கள் என்று லான்செட் கமிஷன் கூறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 78 லட்சம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில், மார்பக புற்றுநோயால் 6,85,000 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

75 வயதிற்குட்பட்ட 12 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக லான்செட் கமிஷன் தெரிவித்துள்ளது.