புதிதாக உருவாக்கப்பட்ட லான்செட் கமிஷனின் அறிக்கையின்படி, 2040 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோய் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தும். 2020 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் தோராயமாக 78 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே ஆண்டில் ஆறு லட்சத்து 85 ஆயிரம் பேர் இந்த நோயால் உயிரிழந்தனர்.

சமீப காலமாக பெண்கள் மத்தியில் இந்த நோய் பாதிப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதன் அறிகுறியாக தீவிர வலி, வீக்கம், சிவத்தல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. எனவே ஆரம்ப கட்டத்திலேயே இதனை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.