திமுக அரசு சார்பில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “தற்போது திமுக கூட்டணியில் இல்லாத பாமக எம்.எல்.ஏக்கள் அருள் மற்றும் சதாசிவம் இருவரும் திமுக அரசின் பணிகளை போட்டி போட்டுக் கொண்டு பாராட்டுகின்றனர். சேலம் மாவட்டத்திற்கு திமுக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வேலைகளை பாராட்டி இருவரும் நன்றி தெரிவிக்கின்றனர். ஆனால், அந்த பாராட்டு கூறுவதிலும் கூட அவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்” என   தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி, “அந்த ஒற்றுமையை அவர்கள் மக்கள் பணிக்காக பயன்படுத்த வேண்டும். பாமகவினர் எப்போதும் இப்படியாக ஒற்றுமையாக இருந்து மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும். அரசின் நல்ல செயல்களை பாராட்டுவதிலும், மக்கள் சேவையிலும் அவர்கள் ஒருமித்துள்ளதை வரவேற்கிறேன்” எனவும் கூறினார்.

அவரது இந்த பேச்சு, பாமகவின் அரசியல் நிலைப்பாட்டை நேரடியாக விமர்சிக்காதபோதிலும், எதிர்வரும் தேர்தலையொட்டி கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.