சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவில்களுக்கு வரும் பக்தர்களின் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் நிலையில், எங்கு பார்த்தாலும் குடமுழக்கு மற்றும் தீபாரதனை நடைபெறுவதால் அவர்களுக்கு வயித்தெரிச்சல். ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்த அண்ணாமலை போன்றவர்களுக்கு இன்று ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் இதுபோன்ற தேவையில்லாத சொற்சொடர்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

திமுகவை பொருத்தவரையில் அடிக்க அடிக்க  உயரும் பந்து. தீட்ட தீட்ட பட்டை தரும் வைரம். காய்ச்ச காய்ச்சல் மெருகேற்றும் சொக்கத்தங்கம். எனவே அவர்கள் அடித்துக் கொண்டே இருக்கட்டும் எங்கள் இயக்கத்தின் தொண்டர்கள் இன்னும் வீர நடை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அண்ணாமலையை போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்கு வர சொல்லுங்கள் பார்ப்போம். மேலும் திமுகவின் அடிமட்ட தொண்டனை வைத்தே நாங்கள் அண்ணாமலையை தோற்கடிப்போம் என்று கூறினார்.