2024 ஐபிஎல் தொடரின் முதல் 21 போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த அணி எப்போது யாருடன் மோதும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 இந்தியன் பிரீமியர் லீக் அட்டவணை இறுதியாக பிப்ரவரி 22 வியாழன் அன்று பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) மூலம் அறிவிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், முதல் 21 போட்டிகள் மட்டுமே வெளியிடப்பட்டன, மீதமுள்ள அட்டவணை 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு வெளியிடப்படும்.

அதன்படி, மார்ச் 22ஆம் தேதி வெள்ளியன்று சென்னையில் உள்ள சேப்பாக் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது. பின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகிறது. அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸுக்குத் திரும்பிய பிறகு, ஹர்திக் பாண்டியா தனது முதல் போட்டியில் முன்னாள் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து மார்ச் 24 ஆம் தேதி விளையாடவுள்ளார்.

முன்னதாக, மக்களவை தேர்தல் காரணமாக 2024 ஐபிஎல் போட்டிகள் நாட்டை விட்டு வெளியில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவில் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும் நிலையில் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை  வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த அணிகள் யாருடன் அப்போது மோதும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

IPL 2024 இன் பகுதி அட்டவணை இதோ :

1. சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மார்ச் 22 (சென்னை 7:30 PM IST)

2. பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் – மார்ச் 23 (மொஹாலி 3:30 PM IST)

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மார்ச் 23 (கொல்கத்தா 7:30 PM IST)

4. ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – மார்ச் 24 (ஜெய்ப்பூர் 3:30 PM IST)

5. குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – மார்ச் 24 (அகமதாபாத் 7:30 PM IST)

6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் – மார்ச் 25 (பெங்களூரு 7:30 PM IST)

7. சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – மார்ச் 26 (சென்னை 7:30 PM IST)

8. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் – மார்ச் 27 (ஹைதராபாத் 7:30 PM IST)

9. ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் – மார்ச் 28 (ஜெய்ப்பூர் 7:30 PM IST)

10. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மார்ச் 29 (பெங்களூரு 7:30 PM IST)

11. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – மார்ச் 30 (லக்னோ 7:30 PM IST)

12. குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மார்ச் 31 (அகமதாபாத் 3:30 PM IST)

13. டெல்லி கேப்பிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – மார்ச் 31 (விசாகப்பட்டினம் 7:30 PM IST)

14. மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் – ஏப்ரல் 1 (மும்பை 7:30 PM IST)

15. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – ஏப்ரல் 2 (பெங்களூரு 7:30 PM IST)

16. டெல்லி கேப்பிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஏப்ரல் 3 (விசாகப்பட்டினம் 7:30 PM IST)

17. குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – ஏப்ரல் 4 (அகமதாபாத் 7:30 PM IST)

18. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – ஏப்ரல் 5 (ஹைதராபாத் 7:30 PM IST)

19. ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ஏப்ரல் 6 (ஜெய்ப்பூர் 7:30 PM IST)

20. மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் – ஏப்ரல் 7 (மும்பை மாலை 3:30 PM IST)

21. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – ஏப்ரல் 7 (லக்னோ 7:30 PM IST)