2024 டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய தீவுகளில் நடைபெற உள்ளது. தொடர் தொடங்க இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை தொடங்கியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகளை tickets.t20worldcup.com என்ற இணையதளத்தில் வாங்கலாம். இந்தியா எதிர்கொள்ளும் நான்கு போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளது.