நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் 2024 லோக்சபா தேர்தலுக்கான தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் விவரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 முதல் 120 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட முதல் கட்ட பட்டியலைவெளியிடுகிறது பாஜக.