நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த மாநிலத்திலும் தங்களுக்கான ரேஷன் பொருட்கள் தொகுப்பை பெற்றுக் கொள்ள முடிகிறது. ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள்களை வாங்குவதற்கு இரண்டாம் கட்ட கணினி மையப்பதிவுகள் மற்றும் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கான பில்களை பிரிண்டர் மூலம் வழங்கும் பணிகள் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை பதிவு முறை காரணமாக பல சிக்கல்களை எதிர் நோக்கும் வகையில் கருவிழி பதிவு முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது அந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.