தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.9% முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 2021-22 மற்றும் 2022 &23 ஆம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் டூ முடித்தவர்கள் ஆளறி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் தகுதிகள் எமிஸ் புள்ளி விவரங்களின் மூலம் சரிபார்க்கப்படும். ஆனால் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கு முன்பு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆளறி சான்றிதழ் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.