திருவண்ணாமலை அருணாச்சலனேஸ்வரர் திருக்கோவிலில் பௌர்ணமி நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு தரிசன கட்டண முறையை முழுமையாக ரத்து செய்து அனைத்து பக்தர்களுக்கும் பொது தரிசனத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அண்மையில் அறிவித்தார்.

தற்போது சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தரிசன கட்டணம் 50 ரூபாய் மூலம் ஆண்டிற்கு சுமார் 1.32 கோடி வருமானமாக கிடைக்க பெற்று வந்த நிலையில் பக்தர்களின் நலன் கருதி இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.