
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் ஒரு தனியார் பொழுது போக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு கிங்டா கா ரோலர் கோஸ்டர் இருக்கிறது. இது சுமார் 450 அடி உயரம் கொண்டது. இது உலகின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் பிரபலமாக இருந்த நிலையில் தற்போது அதன் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது.
இதனால் பூங்கா நிர்வாகத்தினர் அதனை வெடிவைத்து தகர்த்துவிட்டு தற்போது புதிய ரோலர் கோஸ்டரை அமைக்க உள்ளனர். கிட்டத்தட்ட 20 வருடங்களாக இது பயன்பாட்டில் இருந்த நிலையில் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் அதனை பயன்படுத்தியதாக அந்த பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இதனை தற்போது வெடிகுண்டு வைத்து தகர்த்து விட்ட நிலையில் விரைவில் புதிய ரோலர் கோஸ்டர் அமைக்கும் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது