தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும் மின் கட்டண உயர்வை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய சீமான், திடீரென்று முருகன் திமுகவினருக்கு கடவுளாக காட்சியளிக்கின்றார், நான் வேல் வேல் வெற்றிவேல் என்று வேலை தூக்கி திருமுருகத் திருவிழா நடத்தும்போது முரசொலியில் என்னை திட்டி எழுதிய கட்டுரை உள்ளது.

இப்போது வாயில் எதை போட்டு ஒட்டி வைத்திருக்கிறீர்கள். முத்தமிழ் முருகன் மாநாட்டில் குறைந்தது 20 நிமிடங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முருகனைப் பற்றி பேசுவாரா? அருணகிரிநாதர் எழுதியதை பாட வேண்டும் என்று சீமான் சவால் விடுத்துள்ளார்.