ஜன நாயகன்’ படம் எப்போது வெளியாகும் என்று தவம் கிடந்த ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான தகவல் கிடைத்துள்ளது. சென்சார் போர்டுக்கும் படக்குழுவுக்கும் இடையே இருந்த மோதல் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சென்சார் போர்டுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற முடிவெடுத்ததைத் தொடர்ந்து, இப்போது படம் ரிலீஸுக்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளன. இதனால் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வரப்போகிறது.
படக்குழுவினர் இப்போது மறுஆய்வுக் குழுவிடம் (Revising Committee) விண்ணப்பித்து, அடுத்த 20 நாட்களுக்குள் சென்சார் சான்றிதழைப் பெறத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், பிப்ரவரி மாத இறுதியில் ‘ஜன நாயகன்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர்.
