தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான +2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,302 தேர்வு மையங்களில் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த நிலையில் மொழிப்பாட தேர்வுவை  மட்டும் 13,407 மாணவர்கள் எழுதவில்லை என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் பள்ளி மாணவர்கள் 12364 பேரும், தனி தேர்வர்கள் 1043 பேரும் எழுதவில்லை என தேர்வு துறை விளக்கம் அளித்துள்ளது.