அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் அருகே உள்ள ஒரு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஒரு 12-ஆம் வகுப்பு சிறுவன் நேற்று முன்தினம் திடீரென கீழே குதித்து விட்டான். அதாவது 17 வயது சிறுவன் ஒருவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இந்த சிறுவன் சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளான். ஆனால் தான் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பு நீங்கள் வந்ததாக எண்ணி சிறுவன் மன வேதனையில் இருந்துள்ளான். இதனால் தான் 15-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.