சீனாவில் எடுக்கப்பட்ட ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் லிப்ட்டிற்குள் ஏறி பட்டனை அழுத்துகிறார்.

ஆனால், சுமார் 2 முதல் 3 வினாடிகள் வரை லிப்ட் கதவு மூடவில்லை. பொதுவாக யாரும் பொறுமையாகக் காத்திருப்பார்கள் அல்லது மீண்டும் பட்டனை அழுத்துவார்கள். ஆனால், அந்த இளைஞருக்கோ கோபம் உச்சந்தலைக்கு ஏறிவிட்டது.

ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த இளைஞர், லிப்ட்டின் பட்டன் பேனலை ஓங்கி ஓங்கி குத்த ஆரம்பித்தார். அவர் பலமாகத் தாக்கியதில், மொத்தப் பேனலும் அப்படியே பெயர்ந்து கீழே விழுந்தது. பேனல் உதிர்ந்து விழுந்ததும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் கூலாக லிப்ட்டை விட்டு வெளியேறிச் செல்கிறார்.

இந்த வீடியோவை 46 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். “இளைஞருக்குக் கோபம் அதிகம் தான், ஆனால் லிப்ட்டின் தரம் (Build Quality) எவ்வளவு மட்டமாக இருந்தால் இப்படி ஒரு அடியில் உதிர்ந்து விழும்?” எனச் சீனத் தயாரிப்புகளை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

“டெக்னிக்கல் விஷயங்களில் இது போன்ற தாமதம் இயல்பு தான்; அதற்கு இப்படிப் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது முறையல்ல” எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.