+2 துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் நாளை(மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடைபெற உள்ளதால், அவர்கள் நாளை முதல் மே 17 வரை பள்ளிகள், அரசு மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் வரும் 15-ந்தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.