ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு பால் தொடர்பான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஆவினில் வைட்டமின் A, வைட்டமின் D செறிவூட்டப்பட்ட புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஊதா நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.22ஆக நிர்ணயிக்கப்பட்டு இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பால், உடலுக்கு நோய் உ எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெற்று தருவதில் வைட்டமின் D பங்களிப்பதனால், பாலில் வைட்டமின்-டி செறிவூட்டுவது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும்.