கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த இக்னீசியஸ் தன்னுடைய மகன் ஜோனாந்தன் (13) உடன் தேவகோட்டையில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கை கீரனூர் அருகே எதிரே வந்த கார் மீது இவர்கள் பயணித்த கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு காரும் பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் உடனே காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த ஆறு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.