சென்னை காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் நடத்தி வருபவர் மணிகண்டன். மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர், இன்ஸ்டா பிரபலமான நிலையில், கடந்த 2019-ல் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், யூடியுப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மணிகண்டன், நிகழ்ச்சி மேடையில் இளம்பெண் ஒருவரை தனது மனைவி என அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கவிதா, இதுகுறித்து மணிகண்டனிடம் கேட்டபோது, அவர் கொலை மிரட்டல் விடுத்து, வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார்.இதனால் கவிதா கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாங்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.