கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன்,  அண்ணன் சேகர்பாபு போல் ஒரு ஆள் சனாதனத்தை பற்றி பேசுவது…. சனாதன  ஒழிப்பை பேசிவிட்டு,  மறுநாள் ஆன்மீகம் பேசுவது எங்கிருந்து வந்தது என்றால் ? அண்ணாவிடம் இருந்து வந்தது…. வள்ளலாரை நாம்  வெறுக்கவோ,  மறுக்கவே  இல்லை.  வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொல்லி,  பசிப்பிணி என்று சொன்ன வள்ளலார் நமக்கு நல்லவர் தான்…. பசி நோயை நீக்க வேண்டும் என்று சொன்னார்.

பெரியாருக்கு நம்ம குன்றக்குடி அடிகளார் கூட பிரச்சனை இருந்ததா ?  பெரியார் அவ்வளவு கடவுள் மறுப்பு பேசுபவர்…. அடிகளாரை சாமி என்று சொல்லுவார்…. அடிகளாரை எல்லோரும் சாமி என்று சொல்லுகிறார்கள்….  குன்றக்குடி மடத்திற்கு போனாரு……  மடத்திற்கு  வரச் சொல்லி விபூதி எடுத்து , குன்றக்குடி அடிகளார்  பெரியாருக்கு பட்டை போடுகிறார்….

பெரியார் பேசாமல் வாங்கிக் கொண்டு, எல்லாம் இருந்து முடித்து விட்டு…. என்னங்க…. உங்களுக்கு குன்றக்குடி அடிகளார் விபூதி பூசுகிறார்…. மடத்திற்கு போனால் விபூதி பூசி வரவேற்பது என்பது அவர்கள் வைத்திருக்கிற மரியாதை…..  அவர்கள் மேல் வைத்திருக்கிற மரியாதையால் நான் விபூதி வைத்திருந்தேன்…. வீட்டிற்கு வந்த உடனே அழித்துவிடலாம்…. அதெல்லாம் ஒன்னும் பிர்சனனை இல்லை…  இதில் என்ன இருக்கிறது ? அப்படின்னு சொன்னதால தான் குன்றக்குடி அடிகளாரிடம் அப்படி இருக்க முடிஞ்சது.

அப்படிப்பட்ட குன்றக்குடி அடிகளார்  என்ன பண்ணாரு ? அண்ணா மாநாடு நடத்திய பொழுது….. பீச்சில், ஔவையாருக்கு சிலை வச்சாச்சு….  வீரமாமுனிவருக்கு சிலை வச்சாச்சு…. ஆனால் அப்பர்- சுந்தரருக்கும் வைக்கவில்லை… அப்பர்  தமிழ் வளர்த்தவர் தானே…  சுந்தரர் தமிழ் வளர்த்தவர் தானே…  அடிகளார் மேடையில் வைத்து கேட்கிறார்…..  முதலமைச்சர் அண்ணா  அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்…..  வீரமாமுனிவருக்கு சிலை வைத்திருக்கிறீர்கள்…. ஔவையாருக்கு சிலை வைத்திருக்கிறீர்கள்….

எந்த அளவும் குறைந்தவர் அல்ல அப்பரும், சுந்தரம். அப்பரும்,  சுந்தரருக்கு சிலை வைக்க வேண்டும் என சொன்னார். அண்ணா  பேசும்பொழுது சொல்கிறார்….  அடிகளார் அவர் மிகச் சரியாக குறிப்பிட்டார்…..  நாங்கள் ஔவையாருக்கு சிலை வைத்திருக்கிறோம்…. வீரமாமுனிவருக்கு சிலை வைத்திருக்கிறோம்….. அப்பர் – சுந்தருக்கு சிலை வைக்கவில்லை…. ஏன் வைக்கவில்லை ? என்றால்,  அவ்வையாரும்,  வீரமாமுனிவரும் வணக்கத்திற்குரியவர்.

அதனால் சாலையில் சிலை வைத்திருக்கிறோம்….  அப்பர் –  சுந்தரர் வழிபாட்டுக்குரியவர்கள் அதனால் கோயிலுக்குள் வைத்திருக்கிறோம்….  வீரமாமுனிவர் கோயிலுக்குள்ள வைத்திருக்கிறோமா,  ஔவையாரை கோவிலுக்குள் வைத்திருக்கிறோமோ…. அப்போ இங்க யார் வணக்கத்திற்குரியவர்….

யார் வழிபாட்டு குறியவர் என்பதை அண்ணாவில் தொடங்கி,  கலைஞர் வழியில்….  இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து…..  சேகர்பாபு அவர்களுக்கு புரிந்ததால் தான் முதல் நாள் சனாதன எதிர்ப்பு மாநாடு….. அடுத்த நாள் கோவில் கும்பாபிஷேகம்,  அதற்கும் இதற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லை அது வேறு இது வேறு என தெரிவித்தார்.