தமிழக முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்றுள்ள நிலையில், அவருக்குக் காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், “1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அதிகாரத்தில் இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் எங்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரியப் பங்கு வழங்கப்பட்டுள்ளது. இது அடிமட்டத் தொண்டன் வரை அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக” நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ்காரங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.. ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்தது உற்சாகத்தை கொடுக்கிறது.. காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி பேட்டி #CMVijay #Vijay #TVK #TamilNaduCM #CMJosephVijay #CM2026 #TVKVijay #தமிழகவெற்றிகழகம் #Newstamil24x7 pic.twitter.com/VbA14IudGS
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) May 10, 2026
மேலும், இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி அவர்கள் தமிழகம் வந்தது காங்கிரஸ் கட்சியினரிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழாவின் போது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸாருக்கு முதல்வர் விஜய் வழங்கிய அதீத மரியாதை அனைவரையும் கவர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், “விஜய் போன்ற ஒரு தலைவரை நாங்கள் பார்த்ததில்லை” எனப் புகழ்ந்து தள்ளியுள்ளனர். “என்றென்றைக்கும் நாங்கள் முதல்வர் விஜய்க்குத் துணையாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளதன் மூலம், தமிழகத்தில் தவெக – காங்கிரஸ் கூட்டணி ஒரு புதிய பலமான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.
