தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் மாநிலம் தழுவிய தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இதுவரை தமிழகத்தின் 181 தொகுதிகளில் தனது சூறாவளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள அவர், சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறார். வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் தனது அடுத்தகட்ட பரப்புரையைத் தொடங்க உள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

​இது குறித்து எடப்பாடியார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சிக்கால சாதனைகளையும், தற்போதைய திமுக அரசின் குறைபாடுகளையும் மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்வதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் நிலையில், எடப்பாடியாரின் இந்த வருகை அந்தப் பகுதியில் அரசியல் சூட்டை மேலும் அதிகரித்துள்ளது. 234 தொகுதிகளையும் விரைவில் கவர் செய்யும் நோக்கில் இபிஎஸ் காட்டி வரும் இந்தத் வேகம், அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.