முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் குடிப்பெயர்வு அதிகமாகி வருகிறது. இதனால் தமிழ்நாடு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோவதாக தொடர்ந்து சமூக மற்றும் அரசியல் தளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வட மாநில தொழிலாளர்களில் குற்றங்களும் முக்கிய செய்தியாக மாறி வருவதும் அவர்களைப் பற்றிய பேச்சுக்கள் வர காரணமாக அமைந்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் குடியேறும் வட மாநில தொழிலாளர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளன. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை இல்லையா என்பது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து விக்ரம ராஜா கூறுகையில் தமிழ்நாட்டில் வேலை இல்லை என்று தன்னை ஏமாற்றிக் கொள்ளாமல் வேலை வாய்ப்புகளைத் தேட இளைஞர்கள் முன் வரவேண்டும்.

விலையை தருவதற்கு வணிகர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம். இங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி மாதம் ரூபாய் 18,000 கோடி வருவாயை வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதனால்தான் வட மாநிலத்தில் வணிகம் அதிகரிக்கிறது. இங்கு வணிகம் பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.