கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சில நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ட்விட்டர், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிரடியாக பணியிலிருந்து நீக்கியது. அந்தவகையில் உலகம் முழுவதும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அமேசான் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது.

தற்போது இந்தியாவில் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதாவது இதில் 1% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இம்மாதம் 18ஆம் தேதி முதல் பணிநீக்கம் குறித்து ஊழியர்களுக்கு அந்நிறுவனம் தெரிவிக்க உள்ளது. இந்த  பணிநீக்கம் 1,000 இந்திய ஊழியர்களை பாதித்துள்ளது.