whatsapp நிறுவனம் ஐபோன்களில் கடந்த வருடம் move to iOS என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் நாம் நம்முடைய அனைத்து what’s app data விவரங்களையும் ஆண்ட்ராய்டு போனிலிருந்து iphone க்கு Google drive backup இல்லாமல் ஈசியாக மாற்றிக் கொள்ள முடியும். இந்நிலையில் இதே போல் ஒரு வசதியை தற்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கும் அறிமுகம் செய்ய whatsapp நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக நம்முடைய டேட்டா மிகவும் பாதுகாப்பாக whatsapp உடனே இருக்கும். இந்த ஆண்டு இந்த புதிய chat transfer feature அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

நாம் வாட்ஸப் டேட்டாவை ஒரு ஆண்ட்ராய்டு போனிலிருந்து மற்றொரு ஆண்ட்ராய்டு போனிற்க்கு மாற்ற வேண்டும் என்றால் முதலில் அனைத்து டேட்டாவையும் Google drive உள்ளே backup செய்துவிட்டு அதன்பின் புதிய போனில் வாட்ஸ் அப் திறந்து நம்முடைய whatsapp அக்கவுண்ட் உள்ளே சென்று மீண்டும் அதை restore செய்ய வேண்டும். ஆனால் தற்போது இந்த புதிய வசதி வந்ததும் நாம் இவ்வளவு சிரமப்பட தேவையில்லை. அதாவது நேரடியாக நம்முடைய WhatsApp settings -chat transfer to Android என்பதை கிளிக் செய்தால் போதும். நம்முடைய அனைத்து டேட்டா விவரங்களும் புதிய ஆண்ட்ராய்டு போனிற்கு சென்று விடுகிறது. இந்த புதிய வசதி முக்கியமாக புதிதாக ஆண்ட்ராய்டு போன் வாங்கிய பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

பலர் புது போன் வாங்கிய உடனே பழைய போனில் இருக்கும் அனைத்தையும் டெலிட் செய்து விடுகிறார்கள். அவர்கள் Google drive backup எடுக்காமல் இருப்பதால் சில முக்கிய டேட்டா விவரங்களை இழக்கின்றனர். ஆனால் தற்போது இந்த புதிய வசதி மூலமாக அது எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும் what’s app புதிய kept message feature ஒன்றே அறிமுகப்படுத்த உள்ளது. அதில் நாம் disappearing messages ஆப்ஷனை வைத்திருந்தால் அதில் சில மெசேஜ் மட்டும் நமக்கு தற்காலிகமாக ஸ்டோர் செய்து நாம் அதை பார்க்கும் விதமாக இருக்கும்.

ஆனால் நாம் அந்த மெசேஜ் சென்று un keep ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். பொதுவாக disappearing message வசதியை ஆன் செய்தால் ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து அந்த சாட் தானாக டெலிட் ஆகிவிடுகிறது. மேலும் சில முக்கியமான தகவல்களையும் தவறுதலாக இழக்க நேரிடும். ஆனால் இந்த kept message feature நம்முடைய சில முக்கிய மெசேஜ் மறையாமல் பார்த்துக் கொள்ளும். தற்போது இந்த வசதிகள் உருவாக்கத்தில் இருக்கிறது. அதனால் இவை விரைவில் அப்டேட் மூலமாக கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.