மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் (Chhindwara) உள்ள சந்தன் கிராமத்தில் (Chandan Gaon) மூன்று மாடிக் கட்டிடத்தில் சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், பள்ளி மாணவிகள் (School Girls) இருவருடன் இரண்டு ஆண்கள் பிடிபட்டனர்.

சோதனை நடந்த வீட்டில் 18 அறைகள் மற்றும் 20 படுக்கைகள் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இது அந்த இடம் சட்டவிரோதமான மற்றும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காட்டுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிடிபட்ட இரு ஆண்களும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் வீட்டின் உரிமையாளரான பண்டிட் அனில் குமார் திவேதியையும் (Pandit Anil Kumar Dwivedi) போலீஸார் கைது செய்தனர்.

உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, வீட்டின் உரிமையாளர் பல மாதங்களாக இதுபோன்றச் செயல்களை ஊக்குவித்து, அக்கம் பக்கத்தினரின் அமைதியைக் குலைத்து வந்துள்ளார். இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு உள்ளதா என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.