
ஈரானைச் சேர்ந்த அகதியான மெஹ்ரான் கரிமி நசெரி, தனது அடையாள ஆவணங்களை இழந்ததால், கடந்த 1988 முதல் 2006 வரை பிரான்சின் சார்ல்ஸ் டி கோல் விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வாழ்ந்தவர். எந்த நாட்டும் அவரை அனுமதிக்காத காரணத்தால், சட்ட ரீதியான இடமின்றி விமான நிலைய டெர்மினல் 1-ல் தங்கியிருந்தார். இவர் படித்த புத்தகங்களும் ஜர்னல்களும், மெக்டொனால்ட்ஸ் உணவுகளும் அவரின் தினசரி வாழ்க்கையாக இருந்தது. இவரின் வாழ்க்கை “The Terminal” என்ற ஹாலிவுட் திரைப்படத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
கடந்த 2006ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் ஸ்பில்பெர்க் வழங்கிய தொகையுடன் ஹாஸ்டலில் தங்கினார். ஆனால் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்பிய அவர், 2022 நவம்பர் 12 அன்று டெர்மினல் 2F பகுதியில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது நீண்ட விமான நிலைய வாழ்க்கையைப் பாராட்டிய விமான நிலைய நிர்வாகம், “அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். நாங்கள் அவருக்கு உண்மையான பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்க விரும்பினோம்” என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளனர்.