அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் உள்ள லாடர்டேல் கவுண்டி பள்ளிகளில் வேலை பார்த்து வந்த நிக்கோல் விகிங்டன் (வயது 41) என்ற திருமணமான மதிய உணவுப் பணியாளர், 19 வயதிற்குள் உள்ள மாணவனுடன் தனது வீட்டில் பாலியல் உறவு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 7 மற்றும் 31 ஆம் தேதிகளில் இந்த சம்பவங்கள் நடந்ததாக அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். விசாரணையின் போது தன் உரிமைகளை விலக்கிக் கொண்டு முழுமையான ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அலபாமா மாநிலத்தில் சட்டப்படி உடலுறவு கொள்ள சம்மதித்தால் வயது 16 என்றாலும், பள்ளி ஊழியர் ஒருவர் 18 வயதுக்குள் உள்ள மாணவருடன் பாலியல் உறவு கொள்ளும் பட்சத்தில் குற்றமாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில், நிக்கோல் விகிங்டன் மீது பள்ளி ஊழியராக இருக்கும்போது மாணவனுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் USD 100,000 பிணையில் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நிர்வாக விடுப்பிலும் வைத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.
