இந்தியாவின் கடைசி உடன்கட்டை ஏறுதல் வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னதாக இந்தியாவில் உடன்கட்டை ஏறுதல் வழக்கம் இருந்தது. இது சமஸ்கிருதத்தில் சதி என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்து மத தர்மப்படி கணவன் இறந்துவிட்டால் மனைவி விரும்பி உடன்கட்டை ஏறுவார்கள். அதன்படி கணவனின் உடலை தீயில் வைத்து எரிக்கும் போது எரிந்து கொண்டிருக்கும் சடலத்தில் உயிரோடு மனைவியும் இறங்கி விடுவார்கள். இல்லையெனில் வலுக்கட்டாயமாக எரிந்து  கொண்டிருக்கும் சடலத்தின் மீது மனைவியை தள்ளிவிட்டு விடுவார்கள்.‌‌

இந்த வழக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போது இந்தியாவில் ஒழிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த 37 வருடங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் உடன்கட்டை ஏறுதல் சம்பவம் நடந்தது. கடந்த 1987 ஆம் ஆண்டு 18 வயது நிரம்பிய ரூப் கவுர் என்ற பெண்ணுக்கு மால் சிங் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான 8 மாதங்களில் நோய்வாய்ப்பட்டு மால்சிங் இறந்துவிட்டார். இதன் காரணமாக மால் சிங் உடலை எரிக்கும்போது ரூப் கவுர் மாமனார் மற்றும் மைத்துனர் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை ஈவு இரக்கம் இன்றி நெருப்பில் உயிரோடு தள்ளி கொன்று விட்டனர்.

இதுவே இந்தியாவின் கடைசி உடன்கட்டை ஏறுதல் வழக்காகும். கடந்த 1996 ஆம் ஆண்டு மாமனார் மற்றும் மைத்துனருக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டு இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பின் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த விசாரணையில் 25 பேர் ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கிடையில் சிறையிலேயே 6 பேர் உயிரிழந்து விட்டனர். அதன் பிறகு 6 பேர் ஜாமின் வாங்கிக் கொண்டு தலைமறை வாகிவிட்டனர்.

இந்த வழக்கில் கைதானவர்களில் மீதம் 8 பேர் மட்டும் சிறையில் இருந்த நிலையில் அவர்களையும் தற்போது நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அதன்படி பன்வர் சிங், லக்ஷ்மன் சிங், தஷ்ரத் சிங், உதய் சிங், ஜிதேந்திர சிங், நிகால் சிங், ஸ்ரவன் சிங் மற்றும் மகேந்திர சிங் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் இதுபோன்ற மூடநம்பிக்கை பழக்கவழக்கங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போதே படிப்படியாக அழிக்கப்பட்ட அது இன்னும் சில இடங்களில் தொடர்வது வேதனையான ஒரு விஷயமாக உள்ளது.