CGLE-2024 க்கான விண்ணப்ப கால கெடுவை பணியாளர் தேர்வு ஆணையம் நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 17 ஆயிரத்து 727 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில் ஜூலை 24ஆம் தேதி உடன் காலக்கெடு நிறைவடைந்தது. இந்த நிலையில் ஜூலை 27 ஆம் தேதி இரவு 11 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் அதுவரை விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் கட்டணம் செலுத்தி ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை ஒரு நாள் மட்டுமே இருப்பதால் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
17,727 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
“மாதம் ரூ.64,000 வரை சம்பளம்…. எஸ்பிஐ வங்கியில 9,124 காலிப்பணியிடங்கள்…. தமிழ்நாட்டுல மட்டும் 1,410 வேலைகள்…. விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போ தெரியுமா….??
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI வங்கியில் 9,124 ஜூனியர் அசோசியேட்ஸ் (கிளார்க்) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாகத் தமிழ்நாட்டில் மட்டும் 1,410 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வங்கிப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு இது…
Read moreரூ.1 கோடி சம்பளமா…?! ‘பைலட்’ ஆகி விண்ணில் பறப்பது எப்படி…? முழு வழிகாட்டல்…!
தரைமட்டத்தில் இருந்து அண்ணாந்து பார்க்கும் விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்து, கழுகுப் பார்வையில் உலகைக் ரசித்தபடியே பறப்பது பலரின் சிறுவயதுக் கனவாக இருக்கும். இந்தியாவில் தற்போது விமானப் போக்குவரத்துத் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. முன்னணி…
Read more