தெலுங்கானா மாநிலத்தின் குடிஹத்னூர்‌ என்ற பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியை அதே பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். அந்த சிறுமியை தன்னுடைய வீட்டில் அடைத்து வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் 3 மணி நேரம் கழித்து விடுவித்தார். அந்த சிறுமி அழுது கொண்டே தன்னுடைய வீட்டிற்கு சென்று நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் கோபத்துடன் அந்த வாலிபர் வீட்டிற்கு சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். அந்த வாலிபர் அவர்களிடமிருந்து தப்பி தன் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்டார்.

அந்த வாலிபரை வெளியே வருமாறு அவர்கள் கூறிய நிலையில் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் கோபத்தில் வீட்டுக்கு தீ வைத்து விட்டனர். வீடு முழுவதும் தீ பரவிய நிலையில் தாக்குதல் காரணமாக வாலிபர் வீட்டிற்குள் மயங்கி விழ  காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தது. அவர்கள் சிறுமியின் உறவினர்களை தடுத்த நிலையில் கோபத்தில் கற்களை வீட்டின் மீது வீச ஆரம்பித்து விட்டனர். அந்த வாலிபரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் கோபம் அடைந்த ஊர் மக்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இன்ஸ்பெக்டர் உட்பட 5 போலீசார் காயமடைந்தனர். அதோடு போலீசாரின் வாகனங்களையும் தீ வைத்து எரித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் அந்த பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.