மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மான்பாடா அதிவிலி பகுதியில் ஒரு 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை கடந்த 30ஆம் தேதி அதே பகுதியில் சேர்ந்த ஒரு 20 வயது வாலிபர் கடத்தி சென்றார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சிறுமியையும் வாலிபரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் ரயில்வே நிலையத்தில் சிறுமி சுற்றி திரிந்த நிலையில் ரயில்வே போலீசார் அவரை மீட்டனர்.

அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் கடத்தி சென்ற வாலிபர் ஓடும் ரயிலில் வைத்து தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். சிறுமியை அந்த வாலிபர் பலாத்காரம் செய்த பிறகு அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் பெற்றோர் சிறுமியை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் வாலிபர் ரயில்வே நிலையத்தில் தனியாக சிறுமியை விட்டுவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.