பழைய கைபேசி ஒன்றை வாங்குவதற்காக ஏழைத் தம்பதி ஒருவர் தங்களிடம் இருந்த 10 ரூபாய் நாணயங்களைச் சேகரித்துக் கொண்டு கடைக்கு வந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. ஒரு கைபேசி கடையின் கல்லாப் பெட்டியில் தன்னிடம் இருந்த சில்லறை நாணயங்களை அந்தப் பெண்மணி மிகுந்த நம்பிக்கையுடன் எடுத்து வைப்பதும், பணம் போதுமானதாக இல்லையோ என்ற பயம் அவர்களது முகத்தில் தெரிவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.
View this post on Instagram
ஆனால், அந்த நாணயங்களை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட கடைக்காரர், அவர்களுக்குப் புதிய கைபேசியை வழங்கியதுடன் உரிய மரியாதையுடன் அவர்களை அனுப்பி வைத்தார். மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்தும் இந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் தளத்தில் இதுவரை நான்கு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், கடைக்காரரின் இந்தச் செயலை பாராட்டி லட்சக்கணக்கானோர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
