தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு பல நல பணிகளை மக்களுக்கு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 5ஆம் தேதி கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் சாலை ஜிஎன் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 257 நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில் 15000 மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமின் மூலம் வழங்கப்படும் வேலைகளுக்கு குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மாத சம்பளம் இருக்கக் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வேலை வாய்ப்பு முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.