இந்தியாவில் விதவைப் பெண்களுக்கு வித்வா யோஜனா பென்ஷன் திட்டத்தின் கீழ் அரசு தரப்பில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள விதவைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. விதவைப் பெண்களுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு அவர்களுக்கு 25 வயது ஆகும் வரை ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவேளை அந்த பெண்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் 65 வயது வரை மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் 1500 ரூபாய் வழங்கப்படும் நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 4500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விதவைப் பெண்கள் சமூக நலத்துறைக்கு சென்று விதவை ஓய்வூதிய திட்டத்திற்கான படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி கொடுக்க வேண்டும். உங்களுடைய ஆவணங்களை சரிபார்த்த பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும்.