தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் அருகே மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சிறப்பு படை வனவர் நந்தகுமார், வனக்காப்பாளர் சுதாகர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது 150 கிலோ கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது தூத்துக்குடி கணேசபுரம் பகுதியில் வசிக்கும் வினோஜ் குமார் என்பவர் சடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளார். இதனால் வினோஜ்குமாரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோ, கடல் அட்டை ஆகியவற்றை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.