கையில் பணத்துடன் சட்டசபைக்கு வந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அரசு மருத்துவமனையில் பணி நியமனத்தில் ஊழல் நடைபெறுவதாக பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். டெல்லி சட்டசபையில் நடந்து வரும் குளிர்கால கூட்டத் தொடரில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கையில் கட்டு கட்டாக பணத்துடன் கலந்து கொண்டார். இது குறித்து பேசி அவர், அரசால் நடத்தப்படும் பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனையில் பணி நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பணி நியமனத்திற்கு பிறகு செவிலியர்கள் மற்றும் மருத்துவமனையின் பிற பணியாளர்களுக்கு முழுமையான சம்பளம் தரவில்லை என்றும் தெரிவித்தார். இந்த ஊழல் குறித்து டிஜிபி-இடம் முன்பே கூறியதாகவும் இதனை வெளிக்கொண்டு வருவதற்காக 15 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் தெரிவித்தார். இந்த ஊழலில் பெரிய நபர்களுக்கு தொடர்பு உள்ள நிலையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.