இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதமாக ரயில்வே அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தொலைதூர பயணத்திற்கான நேரத்தை குறைக்கும் விதமாக நாட்டின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரை வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்த சேவை பிப்ரவரி மாத இறுதிக்குள் தொடங்கலாம் என அவர் கூறியுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் ரயில் சேவை தொடக்கம் குறித்த தகவல் வெளியாகி இருந்தாலும் இந்த வழித்தடத்திற்கான கட்டணம் குறித்த எந்த தகவலும் கூறப்படவில்லை.  அதேபோல் இந்த ரயில் எங்கெல்லாம் நின்று செல்லும் என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை. டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் இடையே இந்த ரயில் இயங்க தொடங்கினால் பயணத்தில் நிறைய நேரம் மிச்சம் ஆகின்றது. தற்போது காந்திநகர்- மும்பை, டெல்லி- ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி, டெல்லி- வாரணாசி, ஹவுரா- நிவ்ஜல்பைகுரி, நாக்பூர்- பிலாஸ்பூர் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ரயில் விரைவில் நாடு முழுவதும் 75 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் உடையது. இருப்பினும் தற்போது இந்த ரயில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் மொத்தம் ஏழு வந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ரயில் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே மால்டா ஸ்டேஷனில் மட்டுமே நிற்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த ரயில் இந்த வழித்தடத்தில் இயங்கும் அதிக வேக ரயிலாகவும் இருக்கும். இதன் காரணமாக இந்த வழித்தடத்தின் பயணம் மிகவும் எளிதாகவும் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.