பணத்தை முதலீடு செய்வதற்கு ஏராளமான திட்டங்கள் உள்ளது. மக்கள் தங்களது தேவை மற்றும் வருமானத்திற்கு தகுந்தாற் போல் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளலாம். அந்த வகையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் ஒரு பிரபலமான முதலீட்டு திட்டம் ஆகும். நீங்கள் எந்த ஒரு அஞ்சல் அலுவலக கிளைகளிலும் இந்த கணக்கை திறந்து கொள்ளலாம். தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு சேமிப்பு பத்திரமாகும். இது வாடிக்கையாளர்களை அதிலும் முக்கியமாக சிறிய மற்றும் நடுத்தர வருமான முதலீட்டாளர்கள் மற்றும் வருமான வரி விலக்குக்கு தகுதியானவர்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது.

இந்த திட்டத்தில் வரியை சேமிக்கும் போது நிலையான வட்டியை பெறுவதற்கு பாதுகாப்பான முதலீட்டு வரியை தேடும் யாராக இருந்தாலும் முதலீடு செய்து கொள்ளலாம். உத்தரவாதமான  வட்டி மற்றும் முழுமையான மூலதன பாதுகாப்பை வழங்குகிறது. தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது ஐந்து வருட முதிர்வு காலம் கொண்டது. இந்த திட்டம் தற்போது ஏழு சதவீத வருடாந்திர வட்டி விதத்தை வழங்குகிறது. அதேபோல் ppf திட்டம் போல் இல்லாமல் அதிகபட்ச முதலீட்டில் வரம்பு இல்லாததால் அதிகபட்ச முதலீட்டை இது கட்டுப்படுத்தாது.

மேலும் இதில் குறைந்தபட்ச முதலீடு ரூபாய் ஆயிரம். இருப்பினும் குறைந்தபட்ச முதலீடு தொகையை ரூ.100 மதிப்பில் அதிகரிக்கலாம். இந்த திட்டத்தில் வைப்புத் தொகையானது வருமான வரி சட்டம் 1961 பிரிவு 80 c-ன் கீழ் வரி விலக்கு பெற தகுதியானது என்பது கூடுதல் அம்சமாகும். இந்திய தபால் துறை செயல்படுத்தி வரும் திட்டங்களில் சிறந்த ஒரு திட்டம்தான் இந்த திட்டம். இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் முதலீடு திட்டம் என்ற காரணத்தினால் இங்கே முதலீட்டாளர்களின் பணம் வங்கிகளை விட அதிக பாதுகாப்பானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும் இதுபோன்ற சிறுசேமிப்பு திட்டங்கள் எப்போதும் நிலையான பாதுகாப்பை தந்து நிதி நெருக்கடியை சமாளிக்க உதவுகிறது. இந்தத் திட்டத்தில் உங்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை வழங்காமல் போகலாம். ஆனால் நிலையான ஒரு உறுதியான வருமானம் கிடைக்கும். இதுபோல் நிறைய சிறு சேமிப்பு திட்டங்கள் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.