உலகம் முழுவதும் பல வினோதமான மர்மம் நிறைந்த இடங்கள் இருக்கவே செய்கின்றன. விசித்திரமான தோற்றம் கொண்ட இதுபோன்ற பகுதிகள் அவற்றைப்பற்றி கூறப்படும் சுவாரஸ்யமான பின் கதைகள் தற்செயலாக உறுதிப்படுத்தும் வகையில் அமைவதும் வாடிக்கைதான். டெல்லியின் பெர்முடா முக்கோணம் அல்லது குருதி ஆறு என அழைக்கப்படும் கூனி நதி ரத்த நிறத்தில் காண்போருக்கு ஒரு வகையான அச்சத்தை ஊட்டுகிறது.

டெல்லியில் ரோகிணி மாவட்டத்தில் அமைந்துள்ள கூனி நதி எனும் சிறிய ஓடையைச் சுற்றிலும் காடு, மரங்கள் என அழகான இயற்கை சூழல்கள் ஆக்கிரமித்து இருந்தாலும் இது பேய் நடமாட்ட பகுதியாக நம்ப படுகின்றது. இந்த நதியின் நீரை தொடுபவர்கள் உள் இழுக்கப்பட்டு மரணிப்பதாக உள்ளூர் மக்கள் ஆழமாக நம்புவதால் சூரியன் மறைத்தபின் மக்கள் இந்த நதி அருகே செல்வதை அறவே தவிர்த்துவிடுகின்றனர்.

1857 ஆம் ஆண்டு நடந்த போரின் போது இறந்து போன கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் உடல்கள் இந்த நதியில் வீசப்பட்டதாகவும் அதனாலையே இங்கே பேய்கள் உலவுவதாகவும் நம்பப்படுகிறது. அங்குள்ள மக்களின் கூற்றுப்படியே மாலை நேரங்களில் நதி பக்கம் செல்லும் மக்கள் மர்மமாக மரணிப்பதாக கூறப்படுகின்றது. சராசரி ஆறுகளை விட ஆழம் குறைவாக இருக்கும் இந்த ஓடையில் மூழ்கி மக்கள் இறப்பது மற்றும் மாலை நேரங்களில் மனிதர்கள் அழும் சத்தம் கேட்பதாக உள்ளூர் வாசிகள் கூறுவது கூனி நதி பகுதியில் நீடிக்கும் மர்மமாகவே பார்க்கப்படுகின்றது.