உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள குர்நீகேடா கிராமத்தின் காட்டுப் பகுதியில், திங்கள்கிழமை (ஏப்ரல் 7, 2025) காலையில் ஒரு இளைஞரின் சடலம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக ஒரு இந்துப் பெண்ணை முஸ்லிம் இளைஞர் சமரேஷ் (ஹமீத் என்பவரின் மகன்) காதலித்து வந்துள்ளார். ஆனால், இளைஞர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அந்தப் பெண் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், இரு குடும்பத்தினரும் இவர்களது காதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
तू नही तो तेरी याद सही…#सहारनपुर के समरेज को अपने पड़ौसी गांव की हिंदू लड़की से मुहब्बत थी
यह प्रेम कई बर्ष पुराना था. दोनो शादी करना चाहते थे मगर परिवार राजी नही थे. 15 दिन पहले पंचायत हुई जिसमें गांववालों ने समरेज की पिटाई कर दी. घरवालों ने इस दौरान प्रेमिका की सगाई भी कर… pic.twitter.com/5YD4bsxqrs
— Narendra Pratap (@hindipatrakar) April 7, 2025
சமீபத்தில் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதால் மனமுடைந்த சமரேஷ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவு, சமரேஷ் அந்தப் பெண்ணை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, சமரேஷ் அந்தப் பெண்ணின் துப்பட்டாவைப் பிடுங்கி, அதைக் கொண்டே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த காதலி, சடலத்தின் அருகிலேயே அமர்ந்து அழுது புலம்பியுள்ளார். தகவலறிந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியதுடன், அந்தப் பெண்ணை விசாரணைக்காகக் காவலில் எடுத்துள்ளனர். 15 நாட்களுக்கு முன் நடந்த பஞ்சாயத்தில், காதலைத் தொடர்ந்ததற்காகச் சமரேஷுக்குக் கிராம மக்களால் அடி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
