இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது தற்சமயம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
டி20 உலகக்கோப்பை வெற்றியில் முக்கியப் பங்குவகித்த சஞ்சு சாம்சனை, ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இருந்து தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் அதிரடியாக நீக்கினர். அவருக்குப் பதிலாக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், அவர் இரண்டு போட்டிகளிலும் சொதப்பினார்.
Ravichandran Ashwin as Sanju Samson, Vimal Kumar as the chief selector… and the conversation went exactly how you’d imagine 😂 pic.twitter.com/2CoQKpWqEO
— Wickets Hitting (@offpacedelivery) July 8, 2026
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், சஞ்சு சாம்சன் படும் அவஸ்தையைத் தனது யூடியூப் பக்கத்தில் நகைச்சுவையாக மிமிக்ரி செய்து காட்டி, அகர்கர் மற்றும் கம்பீரின் தேர்வு முறையைக் கடுமையாகத் திட்டித் தீர்த்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 0-2 எனப் பின்தங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அஸ்வின், அணியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் குறித்துக் கவலை தெரிவித்துள்ளார். வீரர்கள் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே விளையாடினால், அது சுயநலமான ஆட்டத்திற்கு வழிவகுக்கும் என்றும், அது டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சஞ்சு சாம்சனுக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படும் பட்சத்தில், அவர் அடுத்த முறை களம் காணும்போது அதிரடியாக ஆடாமல் தனது அரைசதத்திற்காகப் பந்துகளை வீணடித்தால் அதில் தப்பில்லை என்று அஸ்வின் ஆதரவாகப் பேசியுள்ளார். சஞ்சு சாம்சன் தற்சமயம் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் நிலையில், அவருக்கு எதற்காக தேவையின்றி “ஓய்வு” வழங்கப்பட்டது என்றும், அவர் நிச்சயம் ஓய்வு கேட்டிருக்க மாட்டார் என்றும் இபிஎஸ் பாணியில் அஸ்வின் சாடியுள்ளார். சஞ்சு சாம்சனைப் போலவே சாய் சுதர்சனுக்கும் இதே நிலைதான் நீடிப்பதாகக் கூறியுள்ள அஸ்வின், நகைச்சுவை கலந்த மிமிக்ரி மூலம் இந்தியத் தேர்வு குழுவின் முகத்திரையைக் கிழித்துள்ளார்.
