சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு காணொளி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள துவாரிகாபுரா பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த வீடியோவில், ஒரு உடும்பை ஐந்து நாய்கள் சேர்ந்து தாக்கும் பயங்கரக் காட்சிகள் பதிவாகியுள்ளன.

உடும்புகள் பொதுவாகவே பெரிய அளவிலும், ஆபத்தான தற்காப்புத் திறன்களும் கொண்ட விலங்குகள். ஆனால் இந்த வீடியோவில், அந்த பல்லி தனியாக இருந்த நிலையில், ஒரு நாய்க் கூட்டம் அதை துரத்தி தாக்கும் விதம், பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வீடியோவில் நாய்கள் ஒன்று போல தாக்குதல் நடத்துகின்றன. சில நாய்கள் அதன் கழுத்தைப் பிடித்து தாக்குகிறது. தன்னைக் காப்பாற்ற உடும்பை அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கிறது, ஆனால் நாய்கள் அதை தொடர்ந்து துன்புறுத்துகின்றன.

இந்த வீடியோ, சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் maheshchandverma9166 என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள், 9,000க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான கருத்துகளை பெற்றுள்ளது.

 

 

மேலும் சமூக வலைதள பயனர்கள் பல்வேறு வகையான எதிர்வினைகளைத் தெரிவித்துள்ளனர். ஒருவர், “அவனும் ஒரு குழந்தைதான்… அதனால்தான் நாய்கள் தாக்கின, பெரியவனாக இருந்திருந்தால் பார்த்திருப்போம்!” என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “அவனை இப்படிக் கொல்ல வேண்டிய அவசியம் ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார். ஒருசிலர் மிகவும் கடும் விமர்சனங்களையும் பகிர்ந்துள்ளனர்.