புதுடெல்லி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியாற்றும் ஒரு TTE (டிக்கெட் பரிசோதகர்) சமூக ஊடகங்களில் திடீரென பிரபலமாகியுள்ளார். அவரின் அழகு மற்றும் ஆளுமையால் பரவலான பாராட்டுகளைப் பெற்ற இந்த TTE, தற்போது இணையத்தில் ஒரு வைரல் ஹீரோவாக மாறியுள்ளார்.
இந்தியாவில் தினசரி லட்சக்கணக்கானோர் ரயில்களில் பயணிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் TTE-யைக் கண்டதும் பயந்து நின்று விடுவது வழக்கம். ஆனால் தற்போது, ஒரு TTE-யை பார்த்து மகிழ்ந்து அவரை ரகசியமாக வீடியோ எடுத்து பதிவிட்ட ஒரு பெண் பயணி, அவரை சமூக ஊடகங்களில் வைரலாக்கியுள்ளார்.
அந்த வீடியோவில், ஏசி கோச்சில் டிக்கெட்டுகளைச் சரிபார்க்கும் TTE ஒருவர் காட்சியளிக்கிறார். அரிஜித் சிங்கின் “அகியான் மிலவாங்கா…” என்ற மெலோடியின் பின்னணியில், அந்த TTE-யின் நடை, நம்பிக்கை, தாராளமான பார்வை ஆகியவை இவரின் அழகையும், ஆளுமையையும் மேலும் தூக்கிப் காட்டுகின்றன.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @foodwithepshi என்ற ஐடியால் பகிரப்பட்டது. இதுவரை 3.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 93,000 லைக்குகள் கிடைத்துள்ளன. பதிவில் #ShatabdiExpress ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டதால், இது சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்ததென்று நம்பப்படுகிறது.
View this post on Instagram
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளனர். ஒருவர், “டிக்கெட்டை ஜன்னலிலிருந்து எறியுங்கள், அவர் உங்களைத் தேடி வருவார்!” என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “சகோதரி, இது அரசு வேலை… அவருக்கு அழகான மனைவி இருக்கவே இருக்கலாம். கனவுலகத்தில் அடிக்கடி சுழன்றிடாதீர்கள்!” என பதிவிட்டுள்ளார். அதேபோல், “ஒரு அரசு ஊழியரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்றும், “இந்த TTE காரணமாக நீங்களும் பிரபலமானீர்கள்!” என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
