15 அடி உயரத்தில் தேங்காய்க்குள் காட்சியளிக்கும் விநாயகர்…. பிரமித்த பக்தர்கள்…!!!

சேலம் செவ்வாய்பேட்டையில் 15 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள தேங்காய் வடிவமைப்புக்குள் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அதன்படி, சேலம் செவ்வாய்பேட்டையில் 15 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள தேங்காய்க்குள் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் பிரமிப்புடன் பார்த்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலக் கொண்டாடப்படுகிறது. இதனால், படையல் பொருட்கள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

Leave a Reply