பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 650 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி உட்பட 3 கட்சிகள் போட்டியிட்டது. இந்நிலையில் பிரிட்டனில் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு எண்ணப்பட்டது.

இதில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெருபான்மை இடங்களான 320-க்கு மேல் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் தற்போது பிரிட்டன் பிரதமராக கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்க இருக்கிறார். மேலும் இதன் மூலம் 14 வருடங்களுக்குப் பிறகு பிரிட்டனில் மீண்டும் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.